LATEST NEWS
இனிமேல் அந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அவசியமில்ல… நாம நிம்மதியா ஓய்வெடுக்கலாம்… கொந்தளித்த ஆர்.எஸ் பாரதி…!!
சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடைந்த தோல்வி குறித்து அவர் மிகுந்த ஆதங்கத்துடனும் ஆத்திரத்துடனும் தனது கருத்துகளை முன்வைத்தார். “சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியன் மாதிரி யாரும் நன்மைகள் செய்ததே கிடையாது; அங்கு மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்தவர் அவர்தான்” என்று ஆர்.எஸ்.பாரதி புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், அந்த மருத்துவமனையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலன்பெற்ற நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் மட்டுமே சரியாக வாக்களித்திருந்தாலே மா.சுப்பிரமணியன் இந்தத் தேர்தலில் எளிதாகப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார் என்று சுட்டிக்காட்டினார். வாக்காளர்களின் இத்தகைய நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடிய அவர், “இனிமேல் அந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அவசியமில்லை; நாம் ஐந்து ஆண்டுகளுக்கு நிம்மதியாக ஓய்வெடுப்போம்” என்று கட்சி நிர்வாகிகளிடம் மேடையில் ஆவேசமாகக் கூறினார்.
