LATEST NEWS
இப்ப இருக்குற ரூம் பத்தாதா..? நடிகர் என்பதால் புதிய அறை தேவையா.? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி சரமாரி கேள்வி…!!
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், காவிரி நதிநீரில் தமிழகத்திற்கான உரிமையைப் பெற தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி நீர் தூய்மைக்கேடடைவதைத் தடுக்க அதிமுக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். மேலும், தமிழக விவசாயிகளின் நலன் சார்ந்த அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து, தமிழக முதலமைச்சரின் அறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், “மாநிலத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு கஷ்டப்படும் வேளையில், முதலமைச்சருக்கு புதிய நவீன அறை தேவையா? இப்ப இருக்குற அறை பத்தாதா..? நடிகர் ன்பதால் புதிய அறை தேவையா.? இப்போது பயன்பாட்டில் இருக்கும் அறையே போதுமானது அல்லவா?” என்று கேள்வி எழுப்பித் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
