LATEST NEWS
என்னது… ஆகஸ்ட் 17-க்கு அப்புறம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டப்போகுதா..? உங்க ராசியும் இதுல இருக்கா..?!
நவகிரகங்களில் கிரகங்களின் ராஜாவாக அறியப்படும் சூரியன், ஆகஸ்ட் 17-ஆம் தேதி தற்போது சஞ்சரித்து வரும் ஆயில்யம் நட்சத்திரத்திலிருந்து தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு நுழைகிறார். ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் பதவி உயர்வு, பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.
இந்த மாற்றத்தால் மேஷ ராசியினருக்கு ஆகஸ்ட் 17-க்குப் பிறகு பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் முதலீட்டுக்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். நிதிநிலை மேம்படுவதுடன் குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அதேபோல, சூரியன் தனது சொந்த நட்சத்திரத்தில் நுழைவதால் சிம்ம ராசியினருக்கு தலைமைத்துவ திறன் அதிகரித்து, வேலையில் முன்னேற்றம், புதிய பொறுப்புகள், பழைய முதலீடுகளிலிருந்து லாபம் மற்றும் புதிய வியாபார வாய்ப்புகள் அமையப் பெறும்.
தனுசு ராசியினருக்கு இக்காலகட்டம் வெற்றி மற்றும் வளர்ச்சியைத் தரக்கூடியதாக அமையும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு, சமூகத்தில் மதிப்பு மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும், குடும்பத்தில் இருந்த பழைய பிரச்சினைகள் தீர்ந்து மனநிம்மதி அதிகரிப்பதுடன், நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்த பணிகளும் வெற்றிகரமாக நிறைவடையும்.
