LATEST NEWS
“அடேங்கப்பா என்ன ஒரு தைரியம்..!” 30 நிமிடங்கள் பெண் சிங்கத்தின் பிடியில்.. ஆபத்தான தருணத்தில் அந்த நபர் செய்த மாஸ் காரியம்.. நெட்டிசன்களை சிலிர்க்க வைக்கும் வீடியோ.!!
குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தின் பாலிதானா அருகே, மால்தாரி குடும்பத்தைச் சேர்ந்த கால்நடைப் பராமப்பாளர் ஒருவரை ஆசிய பெண் சிங்கம்திடீரெனத் தாக்கியது. அந்தப் பெண் சிங்கம் அவரைத் தரையில் தள்ளி, சுமார் 30 நிமிடங்கள் தனது பிடிக்குள் வைத்திருந்தது. சிங்கத்தின் பிடியில் சிக்கிய அந்த நபர், பதற்றமடையாமல் அசையாமல் படுத்துக்கொண்டு, சிங்கத்தின் கோபத்தைத் தூண்டாதவாறு அதன் தலையைத் தனது கையால் மெதுவாக வருடிக்கொடுத்து அமைதிப்படுத்த முயன்றார்.
40 सेकंड की ये वीडियो क्लिप अंत तक जरूर देखिए…! 🦁😨
गुजरात के भावनगर जिले के पालिताना के पास एक मालधारी परिवार के पशु-देखभाल करने वाले व्यक्ति पर शेरनी ने हमला कर दिया। बताया जा रहा है कि शेरनी ने उसे करीब 30 मिनट तक अपने कब्जे में रखा।
आगे जो हुआ किसी ने सोचा भी नहीं था।😱… pic.twitter.com/e3b2PmzjSQ— Saurav paswan (@saurav_paswan2) August 13, 2026
அவரை மீட்க சுற்றியிருந்த கிராம மக்கள் பயத்துடன் சத்தமிட்டு, சிங்கத்தின் மீது கற்களை வீசி விரட்ட முயன்றனர். இறுதியில், அந்தப் பெண் சிங்கம் அவரை விட்டுவிட்டு அருகில் கட்டப்பட்டிருந்த பசுவை நோக்கி நகர்ந்து சென்றது. கடுமையான காயங்களுடன் உயிர் தப்பிய அந்த நபர், உடனடியாக பாலிதானா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். ஆபத்தான சூழலிலும் அவர் காட்டிய அசாத்திய மனதிடமும், சிங்கத்தை அவர் வருடிக்கொடுத்த விசித்திரமான காட்சியும் அடங்கிய இந்த 40 விநாடி காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது
