LATEST NEWS
“என்ன கொடுமை இது..?” கணவர் வீட்டில் அமானுஷ்ய வழிபாடு..? மறுத்த மனைவியின் ஆடையைக் கிழித்து தாக்குதல்… வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்..!!
காண்பூர் பகுதியில் கணவர் மற்றும் புகுந்த வீட்டினரால் மாந்திரீகம் சாபங்கள் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்து, தீக்குளிக்கும் நோக்கில் கான்பூர் போலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். சச்செண்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், பாண்டவ் நகரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரின் மகனை கடந்த 2024 மார்ச் 16 அன்று திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது பெருந்தொகை செலவழிக்கப்பட்ட போதிலும், கூடுதல் பணம் மற்றும் தங்கம் கேட்டு புகுந்த வீட்டினர் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், தனது புகுந்த வீட்டில் இரவில் தந்திர-மந்திர வழிபாடுகள் நடைபெறுவதாகவும், அதில் தன்னை பங்கேற்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது, கணவர் அவருடைய ஆடைகளைக் கிழித்து, அறையில் பூட்டி வைத்துத் தாக்கியுள்ளார். மேலும், அவர் தனது கணவருடன் இந்தோனேசியா சென்றபோதும் இத்தகைய மாந்திரீக நடவடிக்கைகள் தொடர்ந்ததாகவும், 2025 ஜனவரி 21 அன்று அவர் மீண்டும் இதில் ஈடுபட மறுத்தபோது, கணவர் அவரது கழுத்தில் கயிற்றைக் கட்டி மின்விசிறியில் தூக்கிலிட முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், அவரை மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சித்தரிக்கவும் முயன்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த 2026 மார்ச் 29 அன்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும், நான்கு மாதங்களாகக் குற்றவாளிகள் மீது எந்தவிதமான தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றபோது, அங்கு முன்கூட்டியே நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினர். தனக்கு விரைந்து நீதி கிடைக்காவிட்டால் முதலமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் அந்தப் பெண் எச்சரித்துள்ளார். தற்பொழுது இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
