யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால்… CM விஜய் பாணியில்.. நடிகர் தனுஷின் அரசியல் நகர்வு குறித்து அமைச்சர் ஓப்பன் டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால்… CM விஜய் பாணியில்.. நடிகர் தனுஷின் அரசியல் நகர்வு குறித்து அமைச்சர் ஓப்பன் டாக்..!!

Published

on

நடிகர் தனுஷ் சமீபகாலமாகத் தனது ரசிகர்களைத் தொடர்ந்து நேரில் சந்தித்து, ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இவருடைய இந்தத் திடீர் மக்கள் சந்திப்புகள் மற்றும் ரசிகர்கள் உடனான கலந்துரையாடல்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது அவர் விரைவில் அரசியலில் களமிறங்குவதற்கான ஆரம்பக்கட்ட தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்ற விவாதத்தை நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது. தனுஷின் இந்தத் தொடர் நடவடிக்கைகள், அவர் புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் சம்பத் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், ஆனால் இறுதியில் யார் நாட்டை ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது மக்கள் தான் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in