போலீஸ் ஸ்டேஷனுக்கே இந்த ரூல்ஸ் உண்டு… ஆனா 9 மணி வரை நிக்க வச்சிருக்காங்க.. ஆர்.டி.ஓ அலுவலகத்தை வெளுத்து வாங்கிய பெண் ஆசிரியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

போலீஸ் ஸ்டேஷனுக்கே இந்த ரூல்ஸ் உண்டு… ஆனா 9 மணி வரை நிக்க வச்சிருக்காங்க.. ஆர்.டி.ஓ அலுவலகத்தை வெளுத்து வாங்கிய பெண் ஆசிரியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில், பணிகள் தொடர்பாக சென்றிருந்த பெண் ஆசிரியர் ஒருவர் அங்குள்ள மோசமான சூழல் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். மாலை 6 மணிக்கு மேல் பெண்களை விசாரணை செய்யக்கூடாது என்ற பொதுவான விதிமுறை இருக்கும் நிலையில், இரவு 9 மணி வரை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தங்களை காத்திருக்க வைத்ததுடன், அந்த இடம் காடு போல பராமரிப்பின்றி இருப்பதாகவும், போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“மாலை 6 மணிக்கு மேல போலீஸ் ஸ்டேஷன்ல கூட பெண்கள விசாரணை பண்ண கூடாதுனு ரூல்ஸ் இருக்கு.. ஆனா இங்க RTO ஆபீஸ்ல இரவு 9 மணி வரைக்கும் நிக்க வச்சிருக்காங்க.. இந்த இடத்துல சரியான வசதி இல்ல, காடு மாதிரி இருக்கு இந்த இடம்.. RTO ஆபீஸ்னா இப்படி தான் இருக்குமா? அரசாங்கம் கவனம் செலுத்தி முறையான… pic.twitter.com/Sfzz1RTTJg— Polimer News (@polimernews) August 14, 2026

பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்த்தும், அரசு உடனடியாக இந்த ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முறையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார். அலுவலக நடைமுறைகளில் உள்ள இத்தகைய காலதாமதமும், பாதுகாப்பு குறைபாடுகளும் அரசு அலுவலகங்களில் நிலவும் நிர்வாகக் குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in