LATEST NEWS
அடச்சீ… நீச்சல் கத்து தரேன்னு சொல்லி… 25 மாணவிகளை கூட்டிட்டுப் போய் ஆடைகளின்றி அணையில பிரின்சிபல் பண்ண வேலையை பாருங்க..! வைரல் வீடியோவால் சிக்கிய தலைமை ஆசிரியர்… கல்வித்துறை அதிரடி நடவடிக்கை..!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தானாகாஜி பகுதியிலுள்ள பாடாக்சாப்லி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தொடர்பான சர்ச்சை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தலைமை ஆசிரியர் ஆடைகளின்றி 9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுடன் அணைக்கட்டு நீரில் குளிப்பதும், அவர்களுடன் விளையாடுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து, அப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும் மாணவிகளின் பெற்றோர்களும் கடும் கொந்தளிப்படைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, மாணவர்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும் நீச்சல் கற்றுத் தருவதாகவும் கூறி, தலைமை ஆசிரியர் காட்டுப் பாதை வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘படாஜ்’ அணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 9 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 20 முதல் 25 மாணவிகளும் அடங்குவர். அந்த அணைப் பகுதி 5 முதல் 6 அடிகள் மட்டுமே அகலமுடையது என்பதோடு ஆழமானது என்பதால், ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பாதுகாப்புக் கருதி கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதிக்கு மக்கள் செல்ல நிர்வாகம் முழுத் தடை விதித்திருந்தது. இருப்பினும், எவ்வித உயிர் காக்கும் உடைகளோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளோ இன்றி, நீச்சல் தெரியாத சிறுமிகளையும் தலைமை ஆசிரியர் அந்த ஆபத்தான மற்றும் தடைசெய்யப்பட்ட நீர்நிலைக்குள் இறக்கியுள்ளார்.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த கிராம மக்களும் பெற்றோர்களும் பள்ளிக்குத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தானாகாஜி காவல் நிலைய காவல்துறையினர் தலைமை ஆசிரியரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதுவரை மாணவர்கள் அல்லது பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை என்றாலும், வைரல் வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் முதற்கட்ட தகவல்களைப் பெற்றுள்ளதாகவும், கல்வித்துறையின் சார்பில் சிறப்புத் தனிக் குழு அமைக்கப்பட்டு நடுநிலையான விசாரணை நடத்தப்பட்டுத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதன்மை வட்டாரக் கல்வி அலுவலர் சகுந்தலா யாதவ் தெரிவித்துள்ளார்.
