CRIME
“புடிச்சுக்கோங்க, கழுத்தை நெரிங்க..!” மனைவியே எமனாக மாறிய கொடூரம்… கணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. காரில் ஏறிப் பறந்த கொலையாளி மாமனார் குடும்பம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
புது டெல்லியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த 31 வயதான வினய் குப்தா, அவரது மனைவி மற்றும் மாமனார் வீட்டாரால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வினய் குப்தாவிற்கும் அவரது மனைவி ரேகாவிற்கும் இடையே தங்களது இரட்டை குழந்தைகளில் ஒருவருக்குச் சிரப் மருந்து கொடுப்பது தொடர்பாக ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரேகா, வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த 10 நிமிடங்களிலேயே தனது தந்தை, அண்ணன்கள் மற்றும் உறவினர்களுடன் மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார். வினய்யின் தாய் அவர்களுக்குப் பிரியாணி மற்றும் உபசரிப்பு செய்ய சமையலறைக்குச் சென்ற அந்தச் சில நிமிடங்களிலேயே இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது.
திட்டமிட்டபடி வினய்யின் மனைவி ரேகா வீட்டின் சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வினய்யை சோபாவில் தள்ளி அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். வினய்யின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தையும் தாயும் தங்களது ஒரே மகனைக் காப்பாற்ற முயன்றபோதும், கொலையாளிகள் அவர்களைத் தள்ளிவிட்டு வினய்யின் நெஞ்சிலும் வயிற்றிலும் சரமாரியாக உதைத்துத் தப்பியோடினர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வினய்யை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார், வினய்யின் மனைவி ரேகா மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் உட்பட 4 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
