மிரள வைக்கும் 40 மணி நேரம்..! பெற்ற பிள்ளைகளை பலிகடாவாக்கிய கள்ளக்காதல்… சிறுவர்கள் கடத்தலில் அடுத்தடுத்த வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..! மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

மிரள வைக்கும் 40 மணி நேரம்..! பெற்ற பிள்ளைகளை பலிகடாவாக்கிய கள்ளக்காதல்… சிறுவர்கள் கடத்தலில் அடுத்தடுத்த வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..! மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு..!!

Published

on

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் லவ்குஷ்நகரைச் சேர்ந்த 12.5 வயது மற்றும் 8 வயதுடைய இரு உடன்பிறந்த சிறுவர்கள், வெள்ளிக்கிழமை மதியம் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். 40 மணி நேரத்திற்கும் மேலாகியும் சிறுவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால், வழக்கு முடிச்சவிழ்க்க முடியாத புதிராக நீடிக்கிறது. சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியபோது, பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மாயமான இரு சிறுவர்களும் ஒரு சந்தேகத்திற்குரிய நபருடன் நடந்து செல்வது கண்டறியப்பட்டது. தாயாரின் புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 137(2)-ன் கீழ் கடத்தல் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஒரு புதிய திருப்பமாகப் பாதிக்கப்பட்ட தாயாரும் அவரது கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபரும் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் கடத்தப்பட்டதற்குப் பின்னால் அந்தப் பெண்ணின் கள்ளக்காதலனுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும், காவல்துறை விசாரணையைத் திசைதிருப்ப இருவரும் சேர்ந்து நாடகமாடுகிறார்களா என்ற கோணத்திலும் உள்ளூர் மக்களிடையே பேச்சுகள் அடிபடுகின்றன. இதனால் காவல்துறை இந்த வீடியோ கோணத்தையும் தீவிரமாக விசாரித்து வருகிறது.

Advertisement

வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு லவ்குஷ்நகர் சப்-டிவிஷனில் 4 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய கூடுதல் எஸ்பி ஆதித்யா பட்லே, தாயாரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், சிசிடிவியில் பதிவான சந்தேக நபரின் நகர்வுகளை வைத்துச் சிறுவர்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். சந்தேக நபர் பிடிபட்டு, சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பிறகே முழு உண்மையும் வெளிவரும் என்றும், அதுவரை சிறுவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற பரபரப்பு நீடிப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in