“தவெகவுக்கு எம்.பி வந்தாத்தான் கூட்டணி” எங்க கூட்டணியில் 23 கட்சிகள் இருக்கு… முதலமைச்சர் விஜய்க்கு காங்கிரஸ் விதித்த அதிரடி நிபந்தனை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தவெகவுக்கு எம்.பி வந்தாத்தான் கூட்டணி” எங்க கூட்டணியில் 23 கட்சிகள் இருக்கு… முதலமைச்சர் விஜய்க்கு காங்கிரஸ் விதித்த அதிரடி நிபந்தனை..!!

Published

on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், திமுக, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறிய விதம் குறித்தும், தமிழக முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் தலைமையிடம் ஆதரவு கோரியது குறித்தும் அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி முற்றிலும் அழிந்துவிட்டது எனப் பழிசுமத்தி, அதற்குச் சாபம் விட்டுத்தான் திமுக கூட்டணியை விட்டு வெளியேறியது என்று மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். திமுகவுடன் சேர்ந்து தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்ட போதிலும், தற்போதும் தங்களது கூட்டணியில் 23 கட்சிகள் வலுவாக அங்கம் வகிக்கின்றன என்பதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தால் மட்டுமே அவர்களைத் தங்கள் கூட்டணியில் சேர்ப்பது குறித்துப் பரிசீலிப்போம் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு, விஜய் முதலமைச்சராவதற்கு முதன்முதலில் யாரிடம் ஆதரவு கேட்டார் என்ற ரகசியத்தையும் உடைத்துள்ளார். தேர்தலில் வென்றவுடன் ஆட்சி அமைக்க முதலமைச்சர் விஜய் முதலில் ஆதரவு கோரி அணுகியது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் தான் என்று கூறி தமிழக அரசியலில் மாணிக்கம் தாகூர் புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in