“உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” 2 மனைவிகள், 5 பிள்ளைகள்… லாரி ஓட்டுநரின் 3-வது லீலை.. காதல் வலையில் சிக்கிய 16 வயது சிறுமியை ஆந்திராவுக்கு கடத்தி… அம்பலமான பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” 2 மனைவிகள், 5 பிள்ளைகள்… லாரி ஓட்டுநரின் 3-வது லீலை.. காதல் வலையில் சிக்கிய 16 வயது சிறுமியை ஆந்திராவுக்கு கடத்தி… அம்பலமான பகீர் பின்னணி..!!

Published

on

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பிரகாஷ் என்ற லாரி ஓட்டுநர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்த அவர், ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்று கடந்த 3 மாதங்களாக அங்கு தங்கி அவரோடு குடும்பம் நடத்தி வந்துள்ளார். மகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதற்கிடையில் அவர்கள் இருவரும் ஆந்திராவில் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த தனிப்படை போலீசார், சிறுமியைப் பத்திரமாக மீட்டதோடு பிரகாஷைக் கைது செய்து வேலூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், லாரி ஓட்டுநரான பிரகாஷுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருப்பதும், அவர்களுக்கு 5 குழந்தைகள் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இரண்டு திருமணங்களை மறைத்து, 16 வயது சிறுமியை ஏமாற்றி மூன்றாவது காதலாக ஆந்திராவுக்கு கடத்திச் சென்றது அம்பலமானது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, சிறுமியை ஏமாற்றிக் கடத்திய குற்றத்திற்காகப் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மீட்கப்பட்ட 16 வயது சிறுமிக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக அவர் தற்போது அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு மனைவிகள் மற்றும் 5 குழந்தைகள் உள்ள நிலையில், லாரி ஓட்டுநர் சிறுமியைப் போக்சோவில் சிறைக்குச் சென்ற இச்சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in