LATEST NEWS
BREAKING: மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்… உயர்கல்வி வங்கிக்கடன்… தமிழக அரசின் மெகா ஜாக்பாட் அறிவிப்பு..!!
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்விக்கடன் வரம்பை ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ரூ.3,000 கோடி வரை கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதாகக் கல்விக்கடனைப் பெறுவதற்கு ஏதுவாக, மாவட்ட வாரியாக பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, கடன் பெறும் செயல்முறைகளை எளிதாக்க உதவுவார்கள். தமிழக அரசின் இந்தத் திட்டம், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் உயர்கல்விக் கனவைத் தடையின்றி நனவாக்க பெரும் துணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
