LATEST NEWS
“எத்தனை நாளுக்கு தான் சேகர்பாபுவே..!” உதயநிதி முன்னாடி கலாய்த்த எம்.எல்.ஏ.. விழுந்து விழுந்து சிரித்த திமுகவினர்..!!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வருகை தந்தனர். பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஆயத்தமாயினர்.
அப்போது, முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சேகர்பாபு, உதயநிதிக்கு அருகே முன்வரிசையில் நிற்க வேகமாக முயன்றார். இதைப் பார்த்த அருகில் இருந்த எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன், “எத்தனை நாளுக்கு தான் சேகர்பாபுவே” என்று நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பவே, அருகிலிருந்த சக திமுக எம்.எல்.ஏ-க்கள் உரக்கச் சிரித்தனர். இதையடுத்து, சேகர்பாபு மெல்லச் சென்று உதயநிதியின் பின்வரிசையில் நின்று கொண்டார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
