LATEST NEWS
“ஐயோ கதவைப் பூட்டிடுச்சே…” பால்கனியில் மாட்டிய பெண்… திறக்கத் தெரியாமல் கால்களால் போராடி அப்பாவியாய் பார்த்த சுட்டிப் பூனை..! சோஷியல் மீடியாவை கலக்கும் கியூட் வீடியோ…!!
சிறு குழந்தைகள் தெரியாமல் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விளையாடுவது வழக்கம். ஆனால், தற்போது செல்லப் பிராணிகளும் இதுபோன்ற காரியங்களைச் செய்யத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஒரு பெண் தனது வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது, அவரது செல்லப் பூனை வீட்டின் கண்ணாடிக் கதவை உள்பக்கமாகப் பூட்டிய சம்பவம் இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பூனையை மிதமிஞ்சி நேசிக்கும் அந்தப் பெண் பால்கனியில் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பயனர்களிடையே கவலையையும் அதே சமயம் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
‘டாக்கோ தி ஜிஞ்சர் சுப்ரமணி சாஸ்திரி பூனய்யார்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் பால்கனியில் நிற்கும் அந்தப் பெண், “என்னுடைய பூனை என்னை பால்கனியில் வைத்து கதவைப் பூட்டிவிட்டது” என்று கூறுகிறார். அப்போது கேமரா பூனையின் பக்கம் திரும்புகிறது. கண்ணாடிக் கதவின் மறுபக்கத்திலிருந்து பூனை அவரைப் பார்த்து நிற்கிறது. கதவைப் பூட்டிய அந்தப் பூனை, அதை மீண்டும் திறப்பதற்காகத் தன் கால்களால் கதவின் கைப்பிடியைப் பிடித்து எழும்பி நின்று தீவிரமாக முயற்சிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
https://www.instagram.com/reel/DcwAJZlztjQ/?utm_source=ig_web_button_share_sheet
எவ்வளவு முயன்றும் பூனையால் கதவைத் திறக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக அப்பெண்ணிடம் தொலைபேசி இருந்ததால், அவர் உடனடியாகத் தனது புரோக்கரைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கூறியுள்ளார். இதையடுத்து, புரோக்கர் சாவி செய்பவரை அழைத்து வந்து வீட்டின் பூட்டை வெளிப்பக்கமாகத் திறந்து, பின்னர் பால்கனி கதவைத் திறந்து அப்பெண்ணை மீட்டுள்ளார். இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பூனையின் சுட்டித்தனத்தைப் பாராட்டி வந்தாலும், “ஒருவேளை உங்களிடம் தொலைபேசி இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்?” என்றும், “இருந்தாலும் அந்தப் பூனை உங்களை விட்டுச் செல்லாமல் கதவருகே நின்று திறக்க முயன்றதே” என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
