“மீண்டும் 30 வயது கிடைத்தால் இந்தத் தவறை செய்ய மாட்டேன்…” அடுத்தவங்களோட உங்களை கம்பேர் பண்ணாதீங்க… ஒரே ஒரு ரீல்ஸ் மூலம் பல லட்சம் பேரை யோசிக்க வைத்த 88 வயது பாட்டி..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மீண்டும் 30 வயது கிடைத்தால் இந்தத் தவறை செய்ய மாட்டேன்…” அடுத்தவங்களோட உங்களை கம்பேர் பண்ணாதீங்க… ஒரே ஒரு ரீல்ஸ் மூலம் பல லட்சம் பேரை யோசிக்க வைத்த 88 வயது பாட்டி..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

88 வயதான பாட்டி சர்தார்னி தில்ஜித் கவுர் என்ற சமூக வலைத்தளப் பிரபலம், தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கியப் பாடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், தான் இப்போது மீண்டும் 30 வயதை அடைந்தால், தான் செய்த ஒரு மிகப்பெரிய தவறைக் கண்டிப்பாக மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதியளிக்கிறார். அதுதான் மனிதர்களிடையே காணப்படும் “ஒப்பிடுதல்” என்ற பழக்கமாகும்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் துயரப்படுகிறார்கள் என்று அவர் கூறுகிறார். யாரோ ஒருவர் புது வீடு வாங்கிவிட்டார், ஒருவருக்குத் திருமணம் நடந்துவிட்டது, சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள் அல்லது சிலரிடம் அதிகப் பணம் இருக்கிறது என்று யோசித்து, ‘நாம் அவர்களை விடப் பின்தங்கிவிட்டோமோ’ என்ற எண்ணம் மனிதர்களுக்குள் இயல்பாகவே எழுந்துவிடுகிறது. ஒப்பீடு செய்வதற்கான அளவுகோல்கள் சமூகத்தில் எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

https://www.instagram.com/reel/DcyQPZwTcwH/?utm_source=ig_web_button_share_sheet

ஆனால், வாழ்க்கை என்பது யாருடனும் போட்டியிடும் ஒரு ஓட்டப்பந்தயம் அல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான நேரமும் காலமும் தனியாக உள்ளது. எனவே, மற்றவர்களோடு ஒப்பிடுவதை விட்டுவிட்டு, நம்மிடம் உள்ளவற்றுக்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்றும், நேர்மையுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். காலத்தின் அழகை நம்பினால், ஏதேனும் ஒரு நாளில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற இந்த உபதேசம் பலரது மனதையும் தொட்டுள்ளதோடு, இணையத்தில் வைரலாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in