மிருகம்ன்னு சொல்லாதீங்கப்பா… நன்றியுள்ள ஜீவனுங்க… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறிய 16 வயது போதை ஆசாமி…! பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடோடி வந்து சிறுவனைச் சுற்றி வளைத்த தெருநாய்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மிருகம்ன்னு சொல்லாதீங்கப்பா… நன்றியுள்ள ஜீவனுங்க… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறிய 16 வயது போதை ஆசாமி…! பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடோடி வந்து சிறுவனைச் சுற்றி வளைத்த தெருநாய்கள்..!!

Published

on

கோவை துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக வந்த தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி தரும் வேறு ஒரு கொடூர சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதில் அசோகபுரம் ரெயில்வே மேம்பால சாலையோரம் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் கஞ்சா மற்றும் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பேசிக் கொண்டிருந்ததும், அங்கிருந்த தெருநாய்கள் அந்த நபரைப் பார்த்து தொடர்ந்து குரைத்ததும் தெரியவந்தது. அந்த நபர் வீசிய கல்லால் நாய்கள் சற்று தூரம் சென்றாலும், தொடர்ந்து அவரைக் கண்காணித்துக் கொண்டே நின்றன.

இந்நிலையில், அந்த போதை நபர் சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றான். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காப்பாற்றுமாறு கூச்சலிட்டபோதும், அப்பகுதியில் யாரும் இல்லாததால் உதவிக்கு யாரும் வரவில்லை. ஆனால், அதனைக் கவனித்த தெருநாய்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்து, அந்த நபரைச் சுற்றி வளைத்துக் குரைத்ததுடன், அவனது கால்களைக் கடித்து இழுத்து அந்தப் பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன. நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்த அவன், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.

Advertisement

நாய்களிடம் இருந்து தப்பியோடிய அந்த நபரைப் பற்றித் துடியலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீற முயன்றது கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், அவன் மதுபோதையில் இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்தச் சிறுவனைக் கைது செய்த போலீசார், அவனைக் கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். போதை ஆசாமியிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தெருநாய்கள் போராடிக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in