சாவுக்கு ‘செக்… சாத்தியமே இல்லைனு சொன்ன மருத்துவர்கள்… 2 மாசத்துக்கு பதிலா 9 மாசம் பன்றி கிட்னியோடு கெத்து காட்டிய 66 வயது முதியவர்..!அமெரிக்காவில் நடந்த வியக்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாவுக்கு ‘செக்… சாத்தியமே இல்லைனு சொன்ன மருத்துவர்கள்… 2 மாசத்துக்கு பதிலா 9 மாசம் பன்றி கிட்னியோடு கெத்து காட்டிய 66 வயது முதியவர்..!அமெரிக்காவில் நடந்த வியக்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

அமெரிக்காவில் தீவிர சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்ட 66 வயதான டிம் ஆன்ட்ரூஸ் என்ற முதியவருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாகப் பொருத்தி மருத்துவ உலகம் புதிய சாதனை படைத்துள்ளது. வழக்கமாக, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொறுத்திக் கொள்பவர்கள் அதிகபட்சமாக 2 மாதங்கள் மட்டுமே உயிர் வாழும் நிலையில், இவர் பன்றியின் சிறுநீரகத்தோடு 9 மாதங்கள் வரை எந்தவித அசௌகரியமும் இன்றி தொடர்ந்து வாழ்ந்துள்ளார்.

அந்த 9 மாத காலக்கட்டத்தில் அவருக்குத் வழக்கமாக அளிக்கப்படும் டயாலிஸிஸ் சிகிச்சை தேவைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பன்றியின் சிறுநீரகம் 9 மாதங்கள் வரை சீராகச் செயல்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவருக்குத் தானமாக மனித சிறுநீரகம் ஒன்று கிடைக்கப்பெற்று, அது வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in