“இன்னைக்கே விசாரணை நடத்துங்க..!” வழக்கையே திருப்பி போட்ட சங்கீதா.. செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இன்னைக்கே விசாரணை நடத்துங்க..!” வழக்கையே திருப்பி போட்ட சங்கீதா.. செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!

Published

on

நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இன்றைய விசாரணையில், இரு தரப்பினருக்கும் இடையே மாறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதைக் சுட்டிக்காட்டி, இந்த வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளையில், காணொலி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜரான சங்கீதா, இந்த வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்திக் கோரிக்கை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட செங்கல்பட்டு நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்றைய பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in