LATEST NEWS
“இனி யாராக இருந்தாலும் தூக்குங்க..!” அரசுத் துறைகளை அதிர வைத்த தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தவு.. பரபரக்கும் அரசியல் களம்..!!
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், உயர் அதிகாரிகள் மீது புகார்கள் வந்தாலும் அதை மறைக்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்பு மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை தலைவர்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கீழ்மட்டப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில், உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மீதான புகார்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், அரசுத் துறையின் கடைநிலை ஊழியர் முதல் உச்சப்பட்சப் பொறுப்பில் இருக்கும் உயரதிகாரி வரை யாராக இருந்தாலும் லஞ்சப் புகாரில் உண்மைத்தன்மை இருக்கும்பட்சத்தில் பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்களை மறைக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்பதால் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
