CINEMA
BREAKING:2 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய ‘புஷ்பா 2’…!கொண்டாட்டத்தில் படக்குழு.. சோகத்தில் ரசிகர்கள்..!!!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன. இந்தத் திரைப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் தேசிய விருது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் சிறப்பான கதைக்களத்திற்காக, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது இயக்குநர் சுகுமாருக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல், படத்தில் கதாபாத்திரங்களின் தோற்றத்தை மெருகேற்றியதற்காக சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருது தீபாலி நூர் மற்றும் ஷீத்தல் சர்மா ஆகியோருக்குக் கிடைத்துள்ளது.
இப்படத்திற்கு இரண்டு முக்கிய விருதுகள் கிடைத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கும் அதே வேளையில், ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமும் மிஞ்சியுள்ளது. ‘புஷ்பா’ முதல் பாகத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற அல்லு அர்ஜுனுக்கு, இந்த இரண்டாம் பாகத்திற்கு அந்த விருது கிடைக்காததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
