CINEMA
தேசிய விருது வழங்குவதில்…. நடிகை சாய் பல்லவிக்கு அநீதி இழைக்கப்பட்டதா…? கொந்தளிக்கும் ரசிகர்கள்….!!
திருச்சிற்றம்பலம் படத்திற்கு நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இப்படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே” என்ற பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருது ஜானி, சதீஷூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன் வென்றது தெரிந்ததே.
இருந்தாலும் இந்த விருது கார்கி படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு கிடைத்திருக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தன்னுடைய தந்தையை விடுவிக்க போராடும் ஆசிரியையாக அவர் அபாரமாக நடித்திருந்தது நினைவிருக்கலாம்.