CINEMA
வேண்டுமென்றே பண்ணிட்டாங்க…. அந்த சமயத்துல ரொம்பவே வருத்தப்பட்டேன்…. இயக்குனர் பா.ரஞ்சித் ஓபன் டாக்…!!
அட்டகத்தி படத்தின் மூலமாக அறிமுகமானவர் பா ரஞ்சித். அந்த படத்தை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றி படங்களை இயக்கி தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டார். இதனை தொடர்ந்து 2021 ஆம் வருடம் ஓடிடி மூலம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் சார்பட்டா பரம்பரை. இந்த வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்திலும் ஹீரோவாக ஆரியவே நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சர்பட்டா பரம்பரை படம் விருது நிகழ்ச்சிகளில் வெளிப்படையாகவே நிராகரிக்கப்பட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. தேசிய விருது பட்டியலிலும் அந்த படம் உள்ளே போகவில்லை இதற்கு என்ன காரணம் என்று நன்றாக தெரியும். என் படத்தை வேண்டும் என்று நிராகரித்து விட்டனர் என்றும், இதற்கு சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.