CINEMA
இப்படியொரு கூட்டணியை யாரும் எதிர்பார்க்கல…அடுத்தடுத்து ஹிட் அடிக்கும் மாரி செல்வராஜ்…மஞ்சணத்தி’ ரகசியம்… இளையராஜாவுடன் கைகோர்க்கும் ‘இந்த’ புதிய படத்தின் பின்னணி…!
பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, ஒட்டுமொத்தத் திரையுலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் என இவர் இயக்கிய அனைத்துத் திரைப்படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றன. எளிய மக்களின் வாழ்வியலையும், சமூக நீதியையும் தனது படைப்புகளின் மூலம் அழுத்தமாகப் பேசி வரும் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக ‘வாழை 2’ திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் அவரது அடுத்த புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜின் அடுத்த புதிய படைப்பிற்கு ‘மஞ்சணத்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தலைப்பு தற்போதே சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜின் எதார்த்தமான வாழ்வியல் கதைக்களமும், இளையராஜாவின் ஆன்மார்த்தமான இசையும் இணையும் பட்சத்தில், இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு காவியமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் படப்பிடிப்பு குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
