CINEMA
“மன உளைச்சலால் என் முதல் குழந்தையை இழந்துட்டேன்…”ஜூலியின் கருக்கலைப்புக்கு தவெக-வினர் தான் காரணமா…எல்லை மீறுகிறதா சைபர் புல்லிங்? ஜூலியின் கண்ணீரும், பயில்வான் ரங்கநாதனின் கேள்விகளும்.. பின்னணி என்ன…!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கண்ணீர் மல்க வெளியிட்ட வாக்குமூலம் சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியைத் தான் விமர்சித்த காரணத்திற்காக, தவெக ஆதரவாளர்கள் தன்னை பெண் என்றும் பாராமல், தனது கணவர் மற்றும் குடும்பத்தைப் பற்றி மிகவும் தரக்குறைவான அவதூறுகளைப் பரப்பியதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த தொடர் சைபர் புல்லிங் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, தான் கர்ப்பமாக இருந்த தனது முதல் குழந்தையை இழந்துவிட்டதாகக் கூறி ஜூலி கதறி அழுதது ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், ஜூலியின் பேச்சில் பல முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். சினிமா மற்றும் அரசியலில் உச்சத்தில் இருக்கும் ஒரு பெரிய தலைவரை ஒருமையில் பேசினால், அவரது ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட பயில்வான், “வேலியில் போன ஓணானை எடுத்து இடுப்பில் விட்டுக் கொண்டது போல” தேவையில்லாத அரசியல் விமர்சனங்களால் தான் ஜூலிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார். மேலும், ஜூலிக்கு எதனால் கரு கலைந்தது, அவர் கீழே விழுந்தாரா அல்லது யாராவது தாக்கினார்களா, எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் போன்ற எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் தராமல், கணவரைப் பேசவிடாமல் அவரே அழுதுகொண்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்புவதாக அவர் அந்தப் பேட்டியில் சாடியுள்ளார்.
பயில்வான் ரங்கநாதனின் இந்த அதிரடியான நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இருவேறான விவாதங்கள் எழுந்துள்ளன. எந்தவொரு பெண்ணும் தனது வயிற்றிலிருந்த குழந்தை மற்றும் கரு கலைந்தது போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களில் பொய் சொல்ல மாட்டார் என்றும், ஒரு பெண் குழந்தையை இழந்து தவிக்கும் போது பயில்வான் ரங்கநாதன் இப்படிப் பேசுவது வரம்பு மீறிய செயல் என்றும் ஒரு தரப்பினர் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், ஜூலியின் அரசியல் விமர்சனங்கள் தான் இந்த அவதூறுகளுக்குக் காரணம் என பயில்வானின் கருத்தை ஆதரித்தும் சிலர் பதிவிட்டு வருவதால், இந்த விவகாரம் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
