LATEST NEWS
“அந்த சதிவலையில் வீழாதீங்க!”.. முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கொடுத்த பகிரங்க எச்சரிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சதிவலையில் தமிழக முதல்வர் விஜய் சிக்கக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கர்நாடகாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது, தமிழ்நாடு பல ஆண்டுகளாகப் போராடி உச்ச நீதிமன்றத்தின் மூலம் சட்டப்பூர்வமாகப் பெற்றுள்ள காவிரி உரிமைகளை முற்றிலுமாகச் சிதைத்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், அரசியல் கூட்டணி மயக்கத்தில் கர்நாடகாவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று விஜயைக் கேட்டுக்கொண்டுள்ள அவர், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, தமிழகத்தின் காவிரி உரிமையைப் பாதுகாக்க அடுத்தகட்டச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
