CINEMA
அனிமல் படத்தில் அந்த ரோலில் நடிக்க இருக்கும் த்ரிஷா…. வேண்டாம் என எச்சரிக்கும் ரசிகர்கள்…!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்திருப்பவர்தான் திரிஷா. இவர் ஜோடி என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கில்லி, மங்காத்தா, சாமி உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அழகு மற்றும் நடிப்பு திறமை மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார். விடாமுயற்சி, தக்லைப் போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர் ஹீரோயின் ஓரியண்டட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிருந்தா என்ற வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் திரிஷா நடிக்க போகும் அடுத்த படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அனிமல் படத்தில் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தில் வில்லி ரோலில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த த்ரிஷா ரசிகர்கள் சந்திப் ரெட்டி இயக்கத்தில் நடிக்க வேண்டாம் அது திரிஷாவின் சினிமா வாழ்க்கைக்கு பெரிய ரிஸ்க் என்றும் கூறி வருகிறார்கள்.