CINEMA
என்னோடு அரைநிர்வாணமாக நடித்த ரன்வீரை பற்றி பேச மறுப்பது ஏன்…? கடுப்பான அனிமல் பட நடிகை…!!
பிரபல ஹிந்தி நடிகை திரிப்தி டிம்ரி அனிமல் படத்தில் நடித்துள்ளார். அனிமல் படம் ஆணாதிக்கம் நிறைந்த ஒரு படம் என்றும் பெண் வெறுப்பை ஊக்குவிக்கிறது என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த படத்தில் திரிப்தி நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அனிமல், பேட் நியூஸ் போன்ற படத்தில் ஆபாசமாகவும் நிர்வாணமாகவும் நடித்துள்ளதால் உங்களை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அவர், நான் இதுபோன்று நடித்தேன் என்பது சரி. ஆனால் என்னோடு அரை நிர்வாணமாக உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? அவர் ஆண் என்பதாலா? ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா? ஆபாச காட்சிகள் நடித்தால் நிஜ வாழ்க்கையில் அப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் எப்படி எடை போடுவீர்கள்? ஆண்களை ஒரு மாதிரியும் பெண்களை ஒரு மாதிரி பார்ப்பதை விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார்.