CINEMA
பிக்பாஸ்-8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலம்…. யார் தெரியுமா…? குஷியில் ரசிகர்கள்…!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் திடீரென்று கமலஹாசன் நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால்இதிலிருந்து விலகி உள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி அல்லது நயன்தாரா தொகுப்பாளராக வருவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கிவிட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமான நடிகர் அருண் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக கூறப்படுகிறது. இவர் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர்.