CINEMA
பிக்பாஸில் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா…? லீக்கான தகவல்…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சொல்லும் வரை இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சாச்சனா வெறும் 24 மணி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில், நடிகர் ரஞ்சித், மேடை பேச்சாளர் முத்துகுமரன், தொகுப்பாளர் ஜாக்குலின், சௌந்தர்யா, தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகர் அருண் பிரசாத் ஆகிய 6 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸில் ஜாக்குலின் மற்றும் தர்ஷா குப்தா ஒருநாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.