CINEMA
இங்கு வரதுக்கு முன்னாடி கூட அதை செஞ்சேன்…. பிக்பாஸ் வீட்டில் அர்னவ் பேசிய விஷயம்…. கலாய்க்கும் இணையவாசிகள்…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சொல்லும் வரை இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தானம், தர்மம் பண்றது எனக்கு பிடிக்கும். வார வாரம் ஏழைகளுக்கு உதவி செய்வேன். இங்கு வரதுக்கு முன்னாடி கூட மசூதி கட்றதுக்கு கேட்டாங்கன்னு ஒரு டொனேஷன் கொடுத்தேன். எதையும் இல்லைன்னு சொல்ல மாட்டேன். சிக்னல்ல கூட காசு கொடுப்பேன். பெரிய லெவலுக்கு வந்ததும் மக்களுக்கு பிரமாண்டமா ஏதாவது செய்யணு என்று அர்னவ் கூறியுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.