CINEMA
பொம்பள குரல்ல பேசு…! பிக்பாஸ் வீட்டில் முதல்நாளே வெடித்த பிரச்சினை…. தர்ஷிகாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு….!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சொல்லும் வரை இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் முதல்நாளே பிரச்சினை வெடித்துள்ளது. அதாவது போட்டியாளராக பங்குபெற்ற செளந்தர்யாவின் குரலை கிண்டல் செய்யும் விதமாக சீரியல் நடிகை தர்ஷிகா பெண் குரலில் பேசுமாறு கேட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதற்கு முன்னதாக விஜய் சேதுபதி சௌந்தர்யாவின் குரலை விட குணத்தை பாராட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.