முதல்நாளே டுவிஸ்ட் வைத்த விஜய் சேதுபதி…. 24 மணி நேரத்தில் வெளியேறியது இவரா…? எகிறும் எதிர்பார்ப்பு…!! – cinefeeds
Connect with us

CINEMA

முதல்நாளே டுவிஸ்ட் வைத்த விஜய் சேதுபதி…. 24 மணி நேரத்தில் வெளியேறியது இவரா…? எகிறும் எதிர்பார்ப்பு…!!

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.

பிக்பாஸ் சொல்லும் வரை இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர், நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார் என்று விஜய்சேதுபதி அறிவித்துள்ளார். இதனால் முதல் எபிஸோடிலேயே உச்சத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளது. இதில் சஞ்சனா வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in