CINEMA
என் புள்ள காதலிச்சது ஒரு குத்தமா…? ஒரு வயசுல எல்லாரும் அப்படி தான்…. கொந்தளித்த TR…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் டி.ராஜேந்திரன் மகன். தன்னுடைய தந்தை போல பல திறமைகளை கொண்டவர் .தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். தன்னுடைய 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கை 41 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் இவருடைய தந்தை T.ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் பேசுகையில் அவரிடம், சினிமா உலகில் காதல் கிசுகிசுவில் அடிபடாத நபர் நீங்க, ஆனா காதல் கிசுகிசுக்களில் மட்டும் அடிபடுற ஆளு சிம்பு நீங்க என்ன நினைக்கறீங்க என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த TR, சிலம்பரசன் காதலித்தது குற்றமா ? சினிமாவை பொறுத்தவரை எந்த ஒரு நடிகரும் அவர்களுடைய இளம் வயதில் காதல் கிசுகிசுக்களில் சிக்காமலா இருந்தார்கள் என்று கொந்தளித்துள்ளார்.