CINEMA
முதன்முறையாக இணையும் கூட்டணி…முன்னாள் துணை முதலமைச்சர் குடும்பத்துடன் விஜய் சேதுபதி…”வில்லன் ரோல்களுக்கு திடீர் பிரேக்…முறையான அறிவிப்பு மிக விரைவில்!” – கோலிவுட் வட்டாரங்களை பரபரப்பாக்கிய விஜய் சேதுபதியின் புதிய மூவ்…!
தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியிருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்பகாலத்தில் சினிமாவில் பல கஷ்டங்களைச் சந்தித்தாலும், தனது கடின உழைப்பால் முன்னணி இடத்தைப் பிடித்தார். இடையில் விக்ரம், பேட்ட, மாஸ்டர், ஜவான் என வரிசையாக வில்லன் மற்றும் கெஸ்ட் ரோல்களில் அவர் மிரட்டியது ரசிகர்களிடம் சற்று சோகத்தை ஏற்படுத்தியது. அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் வேண்டுகோளை ஏற்று, நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50ஆவது படமாக வெளியான ‘மகாராஜா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தத் திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி, சீனாவிலும் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
‘மகாராஜா’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஏஸ்’ திரைப்படம் சுமார் ரகமாக அமைந்தது. அதேபோல், கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படமும், ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸும் சுமார் ஹிட்டைப் பெற்றாலும், வழக்கம்போல் விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அடுத்ததாக, முதன்முறையாக பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ள ‘ட்ரெய்ன்’ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் கோலிவுட்டின் மிக முக்கியமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த புதிய படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளது. இயக்குநரும், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறாராம். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்தத் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கோலிவுட் பட்சிகள் தெரிவிக்கின்றன. கைவசம் எக்கச்சக்கமான படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி, மீண்டும் ஹீரோவாக கோலிவுட்டில் தனது அசுர வேட்டையைத் தொடர்ந்து வருகிறார்.
