“தேவையில்லாத கதை கட்டுறாங்க…!” “அவங்க ரெண்டு பேருக்கும் சம்மந்தமே இல்ல..- சோஷியல் மீடியா நெட்டிசன்களை வெளுத்து வாங்கிய ஸ்ரீலீலா அம்மா…! – cinefeeds
Connect with us

CINEMA

“தேவையில்லாத கதை கட்டுறாங்க…!” “அவங்க ரெண்டு பேருக்கும் சம்மந்தமே இல்ல..- சோஷியல் மீடியா நெட்டிசன்களை வெளுத்து வாங்கிய ஸ்ரீலீலா அம்மா…!

Published

on

தென்னிந்தியத் திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகவும், இளசுகளின் சென்சேஷனல் கிரஷாகவும் வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. இவரது அசாத்திய நடிப்புத் திறமையை விட, திரையில் இவர் போடும் வெறித்தனமான நடனத்திற்கு என்றே தெலுங்கு, தமிழ் என அத்தனை மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமா, விளம்பரங்கள் எனத் தனது கேரியரில் உச்சத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலீலா குறித்து, கடந்த சில நாட்களாக இணையத்தில் ஒரு புதிய காதல் வதந்தி காட்டுத்தீயாய் பரவி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான திலக் வர்மாவும், நடிகை ஸ்ரீலீலாவும் தீவிரமாகக் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன.

சினிமா மற்றும் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த இரண்டு இளம் பிரபலங்கள் என்பதால், நெட்டிசன்கள் பலரும் இந்தத் தகவலைப் பகிர்ந்து விவாதங்களை எழுப்பி வந்தனர். குறிப்பாக, இருவரும் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நேரில் சந்தித்ததாகக் கூறி, இவர்களது காதலைப் பற்றிய பல கற்பனையான கதைகளும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தின. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஸ்ரீலீலாவின் அம்மா தற்போது மிகவும் கோபமாக பேட்டி ஒன்றை அளித்து, இதன் பின்னணியில் இருக்கும் உண்மையை ஓப்பனாக உடைத்துள்ளார்.

Advertisement

அவர் தனது பேட்டியில், “ஸ்ரீலீலா மற்றும் திலக் வர்மா குறித்து இணையத்தில் பரவி வரும் காதல் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை; இதில் துளியும் உண்மை இல்லை. இப்படிப்பட்ட தேவையில்லாத கதைகள் எங்கிருந்து, எப்படி உருவாகிறது என்றே தெரியவில்லை. இது முற்றிலும் கற்பனையான, தவறான தகவல். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்ததாகச் சொல்லப்படுவது முற்றிலும் எதேச்சையாக  நடந்தது மட்டுமே, அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. சம்மந்தமே இல்லாத ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு தேவையில்லாத கதைகளை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள்” என்று கோபத்துடன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அம்மாவின் இந்த அதிரடி விளக்கத்தின் மூலம் இந்த காதல் வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in