“கல்யாணமான 9-வது நாள்” மனைவியை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு… கணவரை பிரிந்த காதலியுடன் ஓட்டம் பிடித்த புதுமாப்பிள்ளை – தேனியில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கல்யாணமான 9-வது நாள்” மனைவியை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு… கணவரை பிரிந்த காதலியுடன் ஓட்டம் பிடித்த புதுமாப்பிள்ளை – தேனியில் பரபரப்பு..!!

Published

on

தேனி அருகே பெற்றோரின் கட்டாயத்தினால் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை, திருமணமான ஒன்பதே நாட்களில் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தன் காதலியுடன் திருப்பூருக்கு ஓடிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த புதுப்பெண், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த வாலிபர் ஏற்கனவே தான் காதலித்த, தற்போது கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் திருப்பூருக்குச் சென்று குடியேறியிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து தேனி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in