போதைப்பொருள் கடத்தல் மன்னனுடன் முன்னாள் முதல்வர் குடும்பத்திற்கு தொடர்பு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்.. அதிரும் அரசியல் வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

போதைப்பொருள் கடத்தல் மன்னனுடன் முன்னாள் முதல்வர் குடும்பத்திற்கு தொடர்பு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்.. அதிரும் அரசியல் வட்டாரம்..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழகத்திற்கு எந்த வகையில் தீமைகள் வந்திருந்தாலும் அது தீயசக்தியான திமுக மூலம் மட்டும்தான் வந்திருக்கும் என்று கடுமையாகச் சாடினார். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் எப்படி இருந்தது என்பதை மக்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் கடந்த ஆட்சியில் முதலமைச்சரின் குடும்பம் தொடர்பில் இருந்தது என்றும் ஒரே போடாகப் போட்டார்.

கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு குறித்துப் பேசிய அமைச்சர், இது போதைப்பொருள் தொடர்பான விவகாரமோ அல்லது புகார் அளித்ததால் நடந்த கொலையோ அல்ல என்று விளக்கமளித்தார். இரு குழுக்களுக்கு இடையேயான மோதலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டே அமுதன் உயிரிழந்தார் என்றும், உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ அல்லது அரசுக்கோ இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisement

அடுத்ததாக மேகமலை விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் இந்த விவகாரம் முறையாகக் கையாளப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன்வைக்காததும், மத்திய அரசின் ஆய்வின்போது உரிய ஆவணங்களைக் கொடுக்காததுமே தற்போதைய நிலைக்குக் காரணம் என்றார். 2021-ல் புலிகள் காப்பகமாக அறிவித்தபோதும், 2025-26 வரை ஆய்வு நடந்தபோதும் திமுக அரசு முறையான ஆதாரங்களை வழங்கவில்லை என்றும், தற்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருவதாகவும் அவர் பேரவையில் உறுதிபடத் தெரிவித்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in