LATEST NEWS
ஐயோ இது கொடுமை..! “மாடுகளுக்குப் பதிலாக ஏர் பிடித்த கணவன்-மனைவி..!” உழவர்களின் இந்தத் துயரக் காட்சியைப் பார்த்தால் நெஞ்சம் பதறிவிடும்… இணையத்தில் வைரலாகும் சோகம்..!!
உழவர்களின் உழைப்புக்கும் வியர்வைக்கும் விலை மதிப்பில்லை என்பதை உணர்த்தும் வகையில், கணவன்-மனைவி இருவரும் மாடுகளுக்குப் பதிலாக தங்களே ஏர் பிடித்து நிலத்தை உழும் காட்சியும், அருகில் அவர்களின் சிறு குழந்தை நிற்பதும் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழை என எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் இடைவிடாமல் உழைத்து நம் பசி போக்கும் உழவர்களின் உண்மையான உழைப்புக்கு எவ்வித ஈடும் இணையுமில்லை.
जिंदगी में आज पहली बार ऐसी तस्वीर देखी है, किसान की कमाई कितने खून-पसीने से होती है ये तस्वीर देखकर समझ आता है। 😢
पति-पत्नी दोनों खेत में खुद मेहनत कर रहे हैं, बैलों की जगह खुद जुते हुए हैं और उनका छोटा सा बच्चा भी डंडा लेकर साथ खड़ा है।
जिस मिट्टी से हमारा पेट भरता है, उसी… pic.twitter.com/rJ7GYh7cds— Dr.Tabassum Parveen (@Tabassum__2) August 17, 2026
நம் வீடுகளுக்கு வந்து சேரும் ஒவ்வொரு தானியத்தின் பின்னேயும் அவர்களின் கண்ணீரும், வியர்வையும், குடும்பத்தின் தியாகமும் மறைந்துள்ளது. பணம் கொடுத்து வாங்கினாலும், உழவர்களின் தியாகத்தால் மட்டுமே விளைந்திருக்கும் இந்த உணவுப் பொருட்கள் அவர்களின் உழைப்பின் வலிமையை நமக்கு உணர்த்தி, அனைவரின் மனதையும் உருகச் செய்கிறது.
