LATEST NEWS
“திக் திக் திக்..!” கைகளை இறுக்கிய ராட்சத மலைப்பாம்பின் மரணப்பிடி.. விவசாய நிலத்தில் வாலிபருக்கு நேர்ந்த மரண பயம்… அப்புறம் என்னாச்சு..? வைரலாகும் த்ரில்லிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெய்ரி மாவட்டத்தில், விவசாய நிலத்தில் தீவனம் அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை ராட்சத மலைப்பாம்பு ஒன்று திடீரெனத் தாக்கி, அவரது இரண்டு கைகள் மற்றும் கழுத்துப் பகுதியை இறுக்கமாகச் சுற்றிக் கொண்ட பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த அந்த வாலிபரால் எதிர்பாராத இந்த அசுரத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல், மலைப்பாம்பின் பிடிக்குள் சிக்கி உயிருக்குப் போராடியுள்ளார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அனைவரும் இணைந்து மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு, அந்த வாலிபரை மலைப்பாம்பின் மரணப் பிடியிலிருந்து ஒருவழியாகப் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பிய இந்தத் த்ரில்லிங்கான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
