பழைய பங்களாவுக்கு அடியில் ஒளிந்திருந்த பொக்கிஷம்..! சாக்கடைப் பணியின் போது சிக்கிய மர்மப் பை… திறந்து பார்த்த 18 வயது இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பழைய பங்களாவுக்கு அடியில் ஒளிந்திருந்த பொக்கிஷம்..! சாக்கடைப் பணியின் போது சிக்கிய மர்மப் பை… திறந்து பார்த்த 18 வயது இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

Published

on

பெல்ஜியத்தில் உள்ள சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே பகுதியில் அமைந்த 19-ஆம் நூற்றாண்டு பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவந்தன. அப்பணியில் ஈடுபட்டிருந்த கோபி என்ற 18 வயது இளைஞர், எதிர்பாராதவிதமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பையைக் கண்டெடுத்தார்.

ஆர்வத்துடன் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது, அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் சுமார் ரூ.98 கோடி மதிப்புடைய அரிய வகை நாணயங்களும், விலைமதிப்பற்ற தங்கக் கட்டிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்துப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் அப்புதையலைக் கைப்பற்றி ப்ரஸ்ஸல்ஸ் நகருக்குப் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.

Advertisement

தற்போது இந்தச் சொத்துகள் ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் அல்லது திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவையா என்பது குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் சட்ட விதிமுறைகளின்படி, இந்த நிதியின் உண்மையான உரிமையாளர் யார் என்பது கண்டறியப்படாத பட்சத்தில், ஐந்து ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகே புதையலைக் கண்டுபிடித்தவர் அதனை முழுமையாக உரிமை கோர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in