LATEST NEWS
“விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..!” ரூ.75,000 கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!!
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதையும், அவர்களின் கடன் சுமையைக் குறைப்பதையும் இந்த அரசு தனது முதன்மையான கடமையாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், ரூ. 75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும், ரூ. 75,000 முதல் ரூ. 1,00,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ. 75,000 வரையிலும், அதற்கு மேல் பெற்றுள்ள கடன்களுக்கு முறையான நிவாரணத் தொகையும் வழங்கப்படவுள்ளது. இம்மாபெரும் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் அரவணைப்பும் மேலும் வலுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
