எப்படி சாவு வருது பாருங்க… அண்ணனைப் பார்க்க ஓடிய 2 வயது குழந்தை… தாய் கண்ணெதிரே நசுக்கி கொன்ற பள்ளிப் பேருந்து… துடிதுடித்துப்போன தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எப்படி சாவு வருது பாருங்க… அண்ணனைப் பார்க்க ஓடிய 2 வயது குழந்தை… தாய் கண்ணெதிரே நசுக்கி கொன்ற பள்ளிப் பேருந்து… துடிதுடித்துப்போன தாய்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் சதாசிவேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். அச்சகம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் டைட்டஸ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். செவ்வாய்க்கிழமை மாலையில், பள்ளி முடிந்து டைட்டஸ் வழக்கம்போல பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பினான். அப்போது, அவனது இரண்டு வயது தம்பி எஃப்ராயிம் அண்ணன் வருவதற்காக வீட்டின் வெளியே ஆவலுடன் காத்திருந்தான். பேருந்து வீட்டின் அருகே வந்ததும், அண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில் குழந்தை எஃப்ராயிம் பேருந்தை நோக்கி ஓடினான்.

அப்போது பேருந்து ஓட்டுநர் குழந்தை முன் வருவதைக் கவனிக்காமல் பேருந்தை நகர்த்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி பேருந்தின் அடியில் விழுந்த குழந்தை எஃப்ராயிம் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அச்சி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தாயார் மெனிக் மற்றும் குடும்பத்தினரின் கண் முன்னாடியே இந்த கொடூர சம்பவம் நடந்ததால், அவர்கள் கதறித் துடித்த காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

இச்சம்பவத்திற்கு பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஓட்டுநர் ஹெட்ஃபோன் மாட்டிப் பாட்டு கேட்டபடியே பேருந்தை இயக்கியதாகவும், பேருந்தில் இருந்த உதவியாளர் முதியவர் என்பதால் சிறு குழந்தைகளை இறக்கிவிடும்போது போதிய பாதுகாப்பு கவனத்தைச் செலுத்தவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சதாசிவேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in