“ஐயோ அத்த என்ன இதெல்லாம்..?” ஆடி மாசம் முடிஞ்சி மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த கணவன்… மாமியார் வீட்டு இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிய புதுமாப்பிள்ளை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ அத்த என்ன இதெல்லாம்..?” ஆடி மாசம் முடிஞ்சி மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த கணவன்… மாமியார் வீட்டு இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிய புதுமாப்பிள்ளை..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் நர்சிபட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் – கலாவதி தம்பதியரின் மகள் நவ்யாவிற்கும், ஸ்ரீ ஹர்ஷா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதி என்பதால், ஆடி மாத வழக்கப்படி நவ்யா தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். ஆடி மாதம் முடிந்ததைத் தொடர்ந்து, தனது மனைவியை மீண்டும் சொந்த வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக ஸ்ரீ ஹர்ஷா நேற்று தனது மாமியார் வீட்டிற்கு வருகை தந்தார்.

மருமகனின் வருகையை முன்னிட்டு மாமியார் வீட்டார் வீட்டின் வெளியிலிருந்து பூக்களால் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். புது மாப்பிள்ளை ஸ்ரீ ஹர்ஷா வீட்டிற்குள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வெள்ளி சாமி சிலை, பணமுடிப்பு உள்ளிட்ட பல விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி அவரை அசத்தினர். அதன் தொடர்ச்சியாக, மருமகனின் கண்களைக் கட்டி வீட்டிலிருந்த உணவு மேசைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

அங்கு அவரது கண்கட்டுகளை அவிழ்த்த போது, மேஜையில் அடுக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான உணவுகளைக் கண்டு மாப்பிள்ளை ஸ்ரீ ஹர்ஷா திக்குமுக்காடிப் போனார். அங்கு இட்லி, வடை, பூரி, பொங்கல், உப்புமா மற்றும் பல்வேறு இனிப்பு வகைகள் என 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தடல்புடலாகத் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன. மாமனார், மாமியார் மற்றும் மனைவி ஆகியோர் அன்போடு உணவுகளை ஊட்டி மகிழ்ந்த நிலையில், தனக்கு இப்படி ஒரு குடும்பம் கிடைக்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என ஸ்ரீ ஹர்ஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in