ச்சீ..! அடப்பாவிங்களா என்ன இதெல்லாம்..? கார் விபத்தாகியும் காருக்குள் காதல் ஜோடி செய்த காரியம்… ஆத்திரத்தில் காரில் இருந்து இழுத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ச்சீ..! அடப்பாவிங்களா என்ன இதெல்லாம்..? கார் விபத்தாகியும் காருக்குள் காதல் ஜோடி செய்த காரியம்… ஆத்திரத்தில் காரில் இருந்து இழுத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் மழையில் நனைந்தபடி கார் ஓட்டிச் சென்ற ஜோடி ஒன்று, காரில் எல்லை மீறிய காதல் லீலைகளில் ஈடுபட்டுக் கொண்டே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சாலையில் பயணிகள் ஏற்றிச் சென்ற இ-ரிக்‌ஷா ஒன்றின் மீது இவர்களின் கார் பலத்த சத்தத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

விபத்து நேரிட்ட உடனே கீழே இறங்கி பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அந்த ஜோடி காரின் உள்ளேயே தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டும், ஆபாசமான செயல்களில் ஈடுபட்டும் தங்களின் காதல் கொண்டாட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்ட இந்த ஜோடியின் செயலால் சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

Advertisement

இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற அங்கிருந்த கூட்டத்தினர், காரை முற்றுகையிட்டு அந்த இளைஞனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்தனர். அவரின் காதல் மோகத்தை நொடியில் சுக்குநூறாக்கிய பொதுமக்கள், அந்த இளைஞனுக்கு நடுரோட்டிலேயே தர்மஅடி கொடுத்து தங்களது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர். இச்சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in