LATEST NEWS
விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!
தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் ரூ.75,000 வரையிலான கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். அரசின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக விவசாயப் பெருங்குடி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு குறு, சிறு மற்றும் இதர விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய புதிய அறிவிப்பின்படி, அந்த தள்ளுபடி தொகையானது ரூ.75,000-ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்படும் என்று முதலமைச்சர் அவையில் விரிவாக விளக்கமளித்தார்.
மேலும், கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு, அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது உரையில் குறிப்பிட்டார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகளின் கடன் சுமை கணிசமாகக் குறைந்து, அவர்கள் மறுபடியும் புத்துணர்ச்சியுடன் விவசாயப் பணிகளைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
