என்னது.. ஐடி வேலையை விட… விவசாயத்தில் இவ்வளவு பணம் இருக்கா..?அமெரிக்காவுல லட்ச கணக்குல சம்பளம்… ஆனா அத தூக்கி போட்டுட்டு நிலத்தில் இறங்கிய இந்தியர்..! இப்ப 2,800 பேருக்கு மாசம் 1.28 லட்சம் சம்பளம் தர்றாரு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது.. ஐடி வேலையை விட… விவசாயத்தில் இவ்வளவு பணம் இருக்கா..?அமெரிக்காவுல லட்ச கணக்குல சம்பளம்… ஆனா அத தூக்கி போட்டுட்டு நிலத்தில் இறங்கிய இந்தியர்..! இப்ப 2,800 பேருக்கு மாசம் 1.28 லட்சம் சம்பளம் தர்றாரு..!!

Published

on

அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்த ஒருவர், தனது வசதியான வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு அதன்மூலம் ரூபாய் 600 கோடி மதிப்பிலான தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து விகாஷ் என்பவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில், ஐடி ஊழியரின் கடின உழைப்புக்கு பலனாக தொழில் முனைவோராக உருவெடுத்து, அவரது விவசாய நிறுவனம் மாதம் ரூ.60 கோடி லாபம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சசி குமார் என்பவர் பி.டெக் பட்டம் பெற்ற பிறகு, 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில், ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் அவர் அக்‌ஷயகல்பா என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவில் தனது வேலையை விட்டு விலகினார். இதையடுத்து இவர் ஆரம்பித்த விவசாய தொழில், முதல் 9 ஆண்டுகளில் ஆறு முறை திவால் நிலையின் விளிம்பிற்கு சென்றது. அப்போது அவரது மனைவியின் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேமிப்புத் தொகையின் உதவியால், அவர் ஆரம்பித்த விவசாய தொழில் கடினமான காலங்களில் இருந்து மீண்டு வந்தது.

Advertisement

இந்த நிலையில் ஐடி ஊழியரின் விவசாய தொழில் சாம்ராஜ்ஜியம் குறித்து விகாஷ் என்பவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில், அக்‌ஷயகல்பா அமைப்பில் தற்போது 2,800 விவசாயிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.1.28 லட்சம் வரை வழங்கப்படுவதாகவும், ஆண்டுக்கு ரூ.480 கோடி வரை விவசாயிகளுக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல சவால்களைத் தாண்டி தற்போது இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாயும், மாதம் ரூ.60 கோடி லாபமும் ஈட்டும் மிகப்பெரிய விவசாய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in