நம்ம ‘நீங்கள் கேட்ட பாடல்’விஜயசாரதி … பிரபல நடிகரின் மகனா…? வேகமாக பரவிவரும் புகைப்படம்…! - cinefeeds
Connect with us

TRENDING

நம்ம ‘நீங்கள் கேட்ட பாடல்’விஜயசாரதி … பிரபல நடிகரின் மகனா…? வேகமாக பரவிவரும் புகைப்படம்…!

Published

on

90’s களில் ‘நீங்கள் கேட்ட பாடல்’ என்ற நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ஆகும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜயசாரதியை யாராலும் மறக்க இயலாது. இதில் அவர் ஊர் ஊராகச் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்குப் பிடித்தமான பாடல்களைக் கேட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப செய்தார்.

பின்னர் சீரியல் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து விட்டு இடையில் காணாமல் போனவர்,  நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்தார். விஜயசாரதியின் சிறு வயதிலேயே  தாய், தந்தை வீடு தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதற்கு பிறகு இவரும் அவரது மூத்த சகோதரியும் தாயின் தாயாரால் வளர்க்கப்பட்டனர். தற்போது இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.

Advertisement

 

#image_title

இந்நிலையில் விஜயசாரதி தனது தந்தையின் புகைப்படத்தினை வெளியிட்டு உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை மறைந்த  மறைந்த நடிகர் சசிகுமார் தான். இப்புகைப்படம் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது

 

Advertisement
Continue Reading
Advertisement