LATEST NEWS
தளபதி 69…. “மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் அந்த 40 வயது நடிகை”…. யாருப்பா அவங்க?…!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். பின்னர் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
தளபதி 69 திரைப்படத்திற்கு இயக்குனர் யார் என்பது தொடர்பான தகவல் அவ்வப்போது வெளியாகி வந்தது. இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், நெல்சன், அட்லி, ஹெச் வினோத் ஆகியோர்களில் யாராவது ஒருவர் இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டு வருகின்றது. ஆனால் கடைசியாக ஹச் வினோத் தான் இந்த திரைப்படத்தை இயக்கப் போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.
படத்தின் இயக்குனர் யார் என்பதே இன்னும் முடிவாகாமல் உங்கள் உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகைகளின் பெயர்கள் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் நடிகை திரிஷா, சமந்தா, மிர்ணாள் தாகூர் ஆகியோர்களில் யாராவது ஒருவர் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார்கள் என்று கூறப்பட்டு வருகின்றது. திரிஷா ஏற்கனவே விஜயுடன் சேர்ந்து ஐந்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சமந்தாவும் மூன்று முறை விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.