LATEST NEWS
என்னது….! மணிகண்டன் தளபதியை வைத்து படம் இயக்கப் போறாரா!…. விஜய் என்ன சொன்னாரு தெரியுமா?…!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு கிளம்பிச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகின்றது.
இதைத் தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை யார் இயக்குவது என்பது தொடர்பாக தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தது. கார்த்திக் சுப்புராஜ் தளபதி 69 திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறிவந்த நிலையில் தற்போது அவர் சூர்யாவுடன் கமிட்டாகி விட்டார்.
அதைத் தொடர்ந்து ஹெச் வினோத், அட்லி, சங்கர், நெல்சன் உள்ளிட்ட பல இயக்குனர்களின் பெயர்கள் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது குட் நைட் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த மணிகண்டன் விஜயிடம் ஒரு கதையை கூறினாராம். விஜய்யிடம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று ஒரு மணி நேரம் கதையை கூறியதாக தெரிகின்றது.
மணிகண்டன் கூறிய கதை மிகவும் பிடித்துப்போன காரணத்தினால் இந்த கதை நன்றாக இருக்குது. இதில் யாராவது இளம் நடிகர்கள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறாராம். தற்போது இந்த திரைப்படத்தில் மணிகண்டன் தானே நடிக்க இருப்பதாக முடிவு செய்து இருக்கிறாராம். விரைவில் அவரை இயக்குனராக திரையில் காணலாம்.